/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரியில் குளித்த மாணவர் பலி மந்தாரக்குப்பம் அருகே சோகம்
/
ஏரியில் குளித்த மாணவர் பலி மந்தாரக்குப்பம் அருகே சோகம்
ஏரியில் குளித்த மாணவர் பலி மந்தாரக்குப்பம் அருகே சோகம்
ஏரியில் குளித்த மாணவர் பலி மந்தாரக்குப்பம் அருகே சோகம்
ADDED : ஜன 03, 2026 04:59 AM
மந்தாரக்குப்பம்: நண்பர்களுடன் ஏரியில் குளித்த பள்ளி மாணவர் சேற்றில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. இவரது மகன் கிருபாகரன், 14; மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தவர் நேற்று மாலை, 3:30 மணியளவில் கீழ்பாதியில் உள்ள ஏரிக்கு தனது நண்பர்கள், 5 பேருடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத கிருபாகரன், தனது உடலில் 20 லி., தண்ணீர் கேனை கட்டிக்கொண்டு குளித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கிருபாகரனின் இடுப்பில் கட்டியிருந்த வாட்டர் கேன் அவிழ்ந்து தண்ணீரில் மாயமானார்.
இதையறிந்த மாணவரின் நண்பர்கள் கூச்சலிட கிராம மக்கள் ஓடி வந்து கிருபாகரனை தேடினர்.
மாலை 4:00 மணியளவில் சேற்றில் சிக்கிய மாணவனை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

