ADDED : ஜூன் 01, 2026 09:55 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீ ஆதிவராகநல்லுாரை சேர்ந்தவர் சவுந்திரராஜன்,54; லாரி டிரைவர். இவரது இரண்டாவது மகன் விஷ்வராஜ், 21; சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிதம்பரத்தில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீஆதிவராகநல்லுார் வந்த போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த கட்டை மீது பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவ ர் கள் விஷ்வராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் விஷ்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தா ர் .
இதுகுறித்த புகாரின், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
