/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி புத்தக கண்காட்சியில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
/
நெய்வேலி புத்தக கண்காட்சியில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
நெய்வேலி புத்தக கண்காட்சியில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
நெய்வேலி புத்தக கண்காட்சியில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 12, 2025 03:38 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி புத்தக கண்காட்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொழுதூர் ஜெயப்பிரியா வித்யாலயா கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஷகிர் அஹமது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மற்றும் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
நெய்வேலி புத்தக கண்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற ஷகிர் அஹமதை பாராட்டி புத்தக பரிசு மற்றும் சான்றிதழையும் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரை பாண்டியன் வழங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பாராட்டு பெற்ற மாணவன் ஷகிர் அஹமதை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், பள்ளி முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.