தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி மாணவர்கள் முற்றுகை 

 ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி மாணவர்கள் முற்றுகை 

 ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி மாணவர்கள் முற்றுகை 


ADDED : மார் 06, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, மாணவ மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையம் அருகே, இந்திரா நகர் பகுதியில் செல்லும் காய்ஞ்சவாய் கரையோரத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு என கோர்ட் உத்தரவின் பேரில், அங்குள்ள குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இரண்டு முறை ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற போது, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், பள்ளி மாணவர்கள் பொது தேர்வு எழுதும் நேரம் என்ற கோரிக்கை வைத்து காலஅவகாசம் கேட்கப்பட்டது.

தொடர்ந்து தேர்வு எழுத உள்ள மாணவர்கள், உள்ள வீடுகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற வீடுகள் இடித்து அகற்றப்பட்டு, அனைத்து வீடுகளிலும் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர்.

இந்நிலையில் தற்போது, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி இரண்டு நாட்களே ஆன நிலையில் , மீண்டும் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள வீடுகளை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.

அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள், பள்ளிக்கு தேர்வு எழுத செல்லாமல், பொக்லைன் இயந்திரத்தில் ஏறி அமர்ந்தும், எதிரில் அமர்ந்தும், புத்தகத்தை விரித்து படித்தனர்.

தேர்வு முடியும் வரை கால அவகாசம் வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றாமல் திரும்பி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us