பேராசிரியர் பணியிடை நீக்கத்திற்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
பேராசிரியர் பணியிடை நீக்கத்திற்கு எதிர்ப்பு மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
ADDED : செப் 28, 2026 07:43 PM
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலையில், பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் அத்துமீறி பேசிய புகாரில் அண்ணாமலை பல்கலை., வேதியியல் துறை தலைவர் ராஜேந்திரன் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அதனையொட்டி, பல்கலை நிர்வாகம், பேராசிரியர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று காலை வேதியியல் துறை வாயிலில், சில மாணவ, மாணவிகள் துறை தலைவர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார், இதுகுறித்து வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே, போராட்டம் தவறானது எனக் கூறியதை ஏற்று, மாணவர்கள் கலைந்து சென்றனர்.
