/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி மகளிர் கல்லுாரியில் மாணவிகள் பேரவை பதவியேற்பு
/
ஜான்டூயி மகளிர் கல்லுாரியில் மாணவிகள் பேரவை பதவியேற்பு
ஜான்டூயி மகளிர் கல்லுாரியில் மாணவிகள் பேரவை பதவியேற்பு
ஜான்டூயி மகளிர் கல்லுாரியில் மாணவிகள் பேரவை பதவியேற்பு
ADDED : ஜூலை 27, 2025 08:21 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில் மாணவிகள் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்லுாரி அறங்காவலர்கள் சுகன்யாராபின், வாலண்டினாலெஸ்லி, நித்தின்ஜோஷ்வா முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவிகள் பேரவை தலைவர், செயலர், துறைப் பொறுப்பாளர், வகுப்பு பொறுப்பாளர், சங்கங்களின் பொறுப்பாளர் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் இன்னர்வீல் சங்கத் தலைவர் உமா பேசினார். இன்னர்வீல் சங்க உறுப்பினர்கள் சந்தியா, லலிதா, உமாமகேஸ்வரி, தனலட்சுமி, வள்ளிக்கண்ணு, சூர்ய பிரபா, பிரீத்தி பங்கேற்றனர்.