/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் - கோயம்புத்துார் இடையே அரசு பஸ் இயக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
/
கடலுார் - கோயம்புத்துார் இடையே அரசு பஸ் இயக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
கடலுார் - கோயம்புத்துார் இடையே அரசு பஸ் இயக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
கடலுார் - கோயம்புத்துார் இடையே அரசு பஸ் இயக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 13, 2025 02:43 AM
கடலுாரில் இருந்து தொலைதுார நகரங்களான பெங்களூரு, பழனி, வேதாரண்யம், காரைக்கால், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கடலுாரில் இருந்து அனைத்து பெரிய நகரங்களுக்கும் ஒரு அரசு பஸ் இயக்கப்பட வேண்டும் என்பதற்காக கோயம்புத்துாருக்கும் கடலுாரில் இருந்து அரசு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின் திடீரென கோயம்புத்துார் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனால் மற்ற ஊர்களுக்கு தொடர்ந்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடலுாரில் இருந்து தொழில் நகரமான கோயம்புத்துாருக்கு ஏராளமான மாணவர்கள் பொறியியல் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.
மேலும், பலர் தனியார், அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை யில் உள்ளனர். அதுவும் புதுச்சேரியில் இருந்து ஆம்னி பஸ்களில் முன்கூட்டியே ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும்.
கிடைக்காதவர்கள் சேலம் சென்ற பின் கோயம்புத்துாருக்கு பஸ் மாறி செல்ல வேண்டியதாக உள்ளது. இதுபோன்ற நிலை மாணவிகளுக்கும் கடினமாக உள்ளது.
எனவே, கோயம்புத்துாருக்கு அரசு பஸ் இயக்கிட வேண்டும் என மாணவர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.