/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டவுன் பஸ் நின்று செல்ல மாணவர்கள் எதிர்பார்ப்பு
/
டவுன் பஸ் நின்று செல்ல மாணவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 26, 2025 06:45 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில், அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி, சித்தேரிக்குப்பம், கவணை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் தினசரி விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்த்திற்கு வந்து பஸ் ஏறிச் செல்வது வழக்கம். ஆனால், இங்கு, அரசு டவுன் பஸ்கள் நிற்பதில்லை. இதனால், மாணவர்கள் தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் அவலம் உள்ளது.
மேலும், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில், அரசு டவுன் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.