/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்க்கரை ஆலைக்கு மாணவர்கள் களப்பயணம்
/
சர்க்கரை ஆலைக்கு மாணவர்கள் களப்பயணம்
ADDED : பிப் 01, 2024 06:00 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலைக்கு களப்பயணம் சென்றனர்.
பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடிப்படை இயந்திரவியல் தொழிற்கல்வி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 55 பேர், சேத்தியாதோப்பு சர்க்கரை ஆலைக்கு களப்பயணம் சென்றனர். அவர்களை பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் வழியனுப்பி வைத்தார்.
துணை சேர்மன் முகமது யூனுஸ், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழச்சியில், கவுன்சிலர்கள் ஆனந்தன், தையல்நாயகி கணேசமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களை, தொழிற்கல்வி ஆசிரியர் உதயகுமார், தொழிற்கல்வி பயிற்றுநர் மணிகண்டன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.