தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளஸ் 2 தேர்வு நிறைவு மாணவர்கள் மகிழ்ச்சி

 பிளஸ் 2 தேர்வு நிறைவு மாணவர்கள் மகிழ்ச்சி

 பிளஸ் 2 தேர்வு நிறைவு மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 26, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: பிளஸ் 2 தேர்வு நிறைவுபெற்றதை மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, கடந்த 2ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது.

இத்தேர்வை 248 பள்ளிகளை சேர்ந்த 15,019 மாணவர்கள், 15,020 மாணவிகள் என மொத்தம் 30,039 மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றுடன் பிளஸ் 2 தேர்வு முடிவடைந்ததையொட்டி, மாணவர்கள் பேனாவில் உள்ள இங்க்கை சட்டையில் தெளித்தும், கேக் வெட்டியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

உயர்கல்வி சிறப்பாக அமைய ஒருவரையொருவர் வாழ்த்தி விடைபெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us