/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
/
கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 30, 2025 07:17 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெருவில் உ ள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 123 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு இரு வகுப்பறை பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், இடிக்கப்பட்டது.
இதற்கு பதிலாக கடந்த ஆறு ஆண்டாக புதிய பள்ளி கட்டடம் கட்டித் தரப்படவில்லை. இதனால், தற்போது உள்ள இரு வகுப்பறை கட்டடத்திலேயே 1ம் வகுப்பு முதல் 8ம் வரை உள்ள மாணவர்கள் படித்து வருவதால், மாணவர்கள் இடப்பாற்றாக்குறையால் பா திக்கப்பட் டனர். கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டித்தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்தனர்.தொடர்ந்து நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த, பு வனகிரி தாசில்தார் அன்பழகன், மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கூடுதல் பள்ளி கட்டடம் கட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., மூலம் நிர்வாக அனுமதிக்காக கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் புதிய பள்ளி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதை தொடர்ந்து மாணவர்கள் மதியம் 2;00 மணிக்கு வகுப்பிற்கு சென்றனர்.

