ADDED : ஜன 25, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சத்திரம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 16 வயதுடைய மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், வயிற்று வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாணவி சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
புதுச்சத்திரம் போலீசார் பள்ளி மாணவியிடம் விசாரணை செய்து, கர்ப்பத்திற்கு காரணமான ஆண்டார்முள்ளிபள்ளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பவித்ரன், 22, மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.