/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் அறை முன்பு மாணவர்கள் தர்ணா கடலுார் அரசு கல்லுாரியில் பரபரப்பு

ADDED : ஆக 15, 2025 03:24 AM

கடலுார்: கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததைக்கண்டித்து, கல்லுாரி முதல்வர் அறை முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு, கல்லுாரி பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடலுார் எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கடந்த மே மாதத்தில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் அருள்செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் மாணவி மற்றும் பேராசிரியர் கல்லுாரிக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர் மீண்டும் கல்லுாரிக்கு வந்ததாக தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், நேற்று காலை 11 மணிக்கு கல்லுாரி முதல்வரின் அறையின் முன்பு அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியை மீண்டும் கல்லுாரியில் அனுமதிக்கக்கோரியும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மாணவியை மீண்டும் கல்லுாரிக்கு அனுமதிப்பதாக நிர்வாகத்தினர் உறுதி அளித்ததையேற்று 12:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.