தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கல்லுாரி கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிப்பு

 அரசு கல்லுாரி கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிப்பு

 அரசு கல்லுாரி கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிப்பு


UPDATED : ஜூன் 08, 2026 06:22 AM

ADDED : ஜூன் 08, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 06:22 AM ADDED : ஜூன் 08, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் நிர்வாகத்தின் கலந்தாய்விற்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில் விளையாட்டு, தேசிய மாணவர்படை, அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு, இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது.

கலை 10:00 மணிக்கு, கல்லு ாரி கலையரங்க கூடத்தில் கலந்தாய்வு துவங்கும் என கல்லுாரி நிர்வாகம் அறிவித்திருந்தது.



இதன்காரணமாக, நேற்று முன்தினம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8:00 மணி முதலே கல்லுாரிக்கு வந்து, கலையரங்க கட்டடத்தின் முன் காத்திருந்தனர்.

ஆனால், காலை 11:00 மணிவரை கல்லுாரி நிர்வாகம் கலையரங்க கூடத்தை திறக்கமால் இருந்தனர்.

இதனால், கலந்தாய்வு கூடத்திற்கு வந்த மாணவர்கள் திறந்த வெளியில் காத்திருக்கும் நிலை உருவானது.

காலை 11:00 மணிக்கு மேல் கலையரங்கம் திறக்கப்பட்டு துாய்மை படுத்தும் பணி நடந்தது. காலை 10:00 மணிக்கு கலந்தாய்வு துவங்கும் என கல்லுாரி நிர்வாகம் சார்பில் அறிவித்த நிலையில், கல்லுாரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள், பெற்றோர்கள் திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us