தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திட்டக்குடியில் 'மினி ஸ்டேடியம்' :மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பு 

திட்டக்குடியில் 'மினி ஸ்டேடியம்' :மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பு 

திட்டக்குடியில் 'மினி ஸ்டேடியம்' :மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பு 

1


UPDATED : செப் 16, 2026 05:11 PM

ADDED : செப் 16, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 05:11 PM ADDED : செப் 16, 2026 04:42 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி சட்டசபை தொகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்படும் என, கடந்த தி.மு.க., ஆட்சியின் அப்போதைய துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார். இதற்காக, அந்தந்த தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 5 ஏக்கர் பரப்பளவில் ஸ்டேடியம் அமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.

அதில், 400 மீ., ஓடுதளம், அலுவலகம், கேலரி, கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ - கோ, கால்பந்து ஆடுகளங்கள், கழிவறை வசதிகளும் அடங்கும். இதன் மூலம் தொகுதியில் திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி விளையாட்டுத்துறையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால், திட்டக்குடி தொகுதியில் இதுவரை 'மினி ஸ்டேடியம்' அமைக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் தொகுதி இளைஞர்கள், மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாகும் நிலை மட்டும் தொடர்கிறது.

எனவே, திட்டக்குடி தொகுதியில் 'மினி ஸ்டேடியம்' அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது; இத்தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள், மாநில அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்று வருகின்றனர். பின்தங்கிய இப்பகுதியில் முறையாக பயிற்சி பெற மைதானமும், பயிற்சியாளர்களும் இல்லை.

இதனால் தொகுதிக்குட்பட்ட இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவர்களின் விளையாட்டு கனவுகள் கை நழுவும் சூழல் ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் 'மினி ஸ்டேடியம்' கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us