ADDED : மார் 30, 2026 07:00 PM

பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் பிரிவு உபச்சார விழா நடந்தது.
பண்ருட்டி போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீராசாமி , சிறப்ப சப்இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் பணி ஒய்வு பெறுவதையொட்டி பிரிவு உபச்சார விழா நேற்று நடந்தது. விழாவிற்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அருளரசு தலைமை தாங்கினார். பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வரவேற்றனர். தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் ராஜேந்திரன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், துணை சேர்மன் சிவா, எக்ஸ்னோரா கிளப் தலைவர் பசுபதி, கவுன்சிலர்கள் கதிர்காமன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆனந்திசரவணன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், மாவட்ட தொழில் வர்த்தக சங்க செயலர் வீரப்பன், மதிவாணன், திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேரன் , அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் நாகபூஷணம், த.வா.க. சக்திவேல், வி.சி.கட்சி வேங்கடபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
