UPDATED : செப் 03, 2026 10:36 PM
ADDED : செப் 03, 2026 08:53 PM
சிதம்பரம்: வேளாண் இடுபொருட்கள் மற்றும் விதை நெல் மானிய விலையில் விற்கப்படுகிறது.
குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் தமிழ்வேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
குமராட்சி வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடியை துவங்க உள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கு ஏற்ற நடப்பு பட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட சன்ன ரக நெல் கோ 56, ஏடிடீ 51, ஏடிடீ 58, போன்ற சான்று பெற்ற விதைக் குவியல்கள் குமராட்சி மற்றும் அம்மாபேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதை நெல் கிலோ ரூ.20க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் தக்கை பூண்டு விதை 50 சதவீத மானிய விலையில் விற்கப்படுகிறது.
மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவிகித மானியத்தில் கிடைக்கும்.
