/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா
/
துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஆக 30, 2025 07:10 AM

கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த தானுார் பகுதியில் 24.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
தானுாரில் 7.13 கி.மீ., ஆலப்பாக்கத்தில் 7.66 கி.மீ., காயல்பட்டில் 4.12 கி.மீ., திருச்சோபுரத்தில் 7.5 கி.மீ., நீளத்தில் மின்பாதை என 4 புதிய மின்னுாட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த துணைமின் நிலையத்தின் மூலம் ஆலப்பாக்கம், கருவேப்பம்பாடி, தானுார், காயல்பட்டு, தீர்த்தனகிரி, திருச்சோபுரம், மேட்டுப்பாளையம், பூவாணிக்குப்பம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், பள்ளி நீரோடை உள்ளிட்ட 29 சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 12 ஆயிரத்து 285 மின் நுகர்வோர் பயன் பெறுவர்.
இந்த புதிய துணை மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, தலைமை பொறியாளர், விழுப்புரம் மண்டலம் சதாசிவம், மின் தொடரமைப்பு திட்ட தலைமை பொறியாளர் வேல்முருகன், கடலுார் மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.