தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலி தொகுதியில் துணை மின்நிலைய பணிகள் துவக்கம்

 நெய்வேலி தொகுதியில் துணை மின்நிலைய பணிகள் துவக்கம்

 நெய்வேலி தொகுதியில் துணை மின்நிலைய பணிகள் துவக்கம்


ADDED : மார் 14, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: கடலுார் மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கீழக்குப்பம் கிராமத்தில், 230/110 கி.வாட்., கடத்தும் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், 'இந்த துணை மின் நிலையம் கீழக்குப்பம், பண்ருட்டி, கோரணப்பட்டு, வடக்குத்து, எம்.டி.,. குப்பம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தடையில்லா, தரமான மின்சார வினியோகத்தை உறுதி செய்யும். விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில்முனைவோர் அனைவருக்கும் மிகப்பெரிய பயனைத் தரும் திட்டமாகும்,' என்றார் .

விழாவில், பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். மின்வாரிய

முதன்மை பொறியாளர் நாகராஜன் (பொறுப்பு), எஸ்.இ.,க்கள் சரவணதுரைமோகன், சிவக்குமார், திலகர், அன்புசெல்வி, தேன்மொழி, பாலகிருஷ்ணன், சிவகுமார், செல்வமணி, பாரதிராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால் வரவேற்றார். அவைத்தலைவர் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெகநாதன், செல்வகுமார், பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us