ADDED : அக் 08, 2024 02:41 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டியில், சப்வே அமைப்பது குறித்து விஷ்ணுபிரசாத் எம்.பி., ஆய்வு செய்தார்.
பண்ருட்டி - சென்னை சாலை திருவள்ளுவர் நகர், எல்.என்.புரம் ஊராட்சி பகுதி மக்கள் மேம்பாலத்தின் மேல் ஏறி செல்ல அவதியடைந்து வருகின்றனர்.
இதனையடுத்து பண்ருட்டி - சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சப்வே அமைத்து தரக் கோரி விஷ்ணு பிரசாத் எம்.பி.,யிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில், எம்.பி., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் தணிகைசெல்வம் உடனிருந்தனர்.
