/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஜெயந்தி
/
சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஜெயந்தி
ADDED : ஜூலை 05, 2025 03:26 AM
கடலுார்:கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆனி மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் விஜயவள்ளி தாயார் சமேத சக்கரத்தாழ்வார் கோவிலில் நேற்று மகா சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி மகா மண்டபத்தில் சிறப்பு சுதர்சன ஹோமம், பூஜைகள் நடந்தது.
மூலவர் சக்கரத்தாழ்வார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு கலச திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விசேஷ திருமஞ்சனத்திற்குப்பின் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.