/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு
/
கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு
கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு
கடலுார்- - புதுச்சேரிக்கு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு
ADDED : டிச 06, 2024 06:24 AM
கடலுார் : புதுச்சேரிக்கான பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
கடலுார்-புதுச்சேரிக்கு தனியார் பஸ்களில் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், கடலுார்-புதுச்சேரி சாலையில் தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அருகே பாலம் உள்வாங்கியது.
இதனால், இச்சாலையில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தவளக்குப்பம், வில்லியனுார் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், பஸ்கள் கூடுதலாக 10 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், தனியார் பஸ்களில் கடலுார்-புதுச்சேரி பஸ் கட்டணத்தை ரூ.30 ஆக உயர்த்தி வசூலிக்க துவங்கியுள்ளனர். இது பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஆனால், அரசு பஸ்களில் பழைய கட்டணத்திலேயே பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.