/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீரப்பாளையம் சாலையில் திடீர் பள்ளம்; விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : ஜன 09, 2024 07:03 AM

புவனகிரி : கீரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
சிதம்பரத்திலிருந்து கடலுார்,சேலம், பண்ருட்டி , விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கீரப்பாளையம் வழியாக செல்வேண்டும்.இதனால் போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கீரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலை திடீரென உள்வாங்கியதால் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பதை அறியாமல் கார், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. விபத்தை தவிர்க்க அப்பகுதியில்உள்ள கடையின் உரிமையாளர் கடையில் இருந்த விளம்பர போர்டை எச்சரிக்கும் விதமாக வைத்துள்ளார்.
மேலும் புவனகிரி வெள்ளாற்று புதிய பாலத்தில் சிமெண்ட் சாலையில் ஏற்பட்ட பாதிப்பை தார் ஊற்றிசரி செய்ததால் தற்போது பெய்த மழையில் கற்கள் பெயர்ந்து மீண்டும் குண்டு குழியுமாக உள்ளது. எனவேநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.