தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் திடீர் மழை

கடலுாரில் திடீர் மழை

கடலுாரில் திடீர் மழை


ADDED : மே 05, 2025 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2025 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்; கடலுாரில் திடீர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது. கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. 3ம் தேதி முதல் தமிழகத்தில் குறிப்பாக கடலுார், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கடும் சூறாவளி காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்தது. மழை விட்டு விட்டு பெய்ததால் மஞ்சக்குப்பம் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மஞ்சக்குப்பம் மற்றும் ஒரு சில கிராமங்களில் மட்டும் மழை பெய்தது. முதுநகரில் மழை பொழிவு இல்லை. காலையில் எப்போதும் போல சூரிய உதயம் இருந்தது.

அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கிய நிலையில், கடலுார் சில்வர் பீச்சில் மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். வெப்பம் தனிந்து குளிர் காற்று வீசியதால் பொழுதை உற்சாகமாக கழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us