ADDED : மார் 20, 2026 07:53 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ):
புவனகிரி 67, கடலுார் 54, கலெக்டர் அலுவலகம் 52, சேத்தியாதோப்பு 42, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 29, வடக்குத்து 27, வானமாதேவி 23, ஸ்ரீமுஷ்ணம் 21.10, சிதம்பரம் 19.40, பெலாந்துறை 14.20, பரங்கிப்பேட்டை 12.70, விருத்தாசலம் 10, அண்ணாமலை நகர் 8, பண்ருட்டி 8, கொத்தவாச்சேரி 7, குறிஞ்சிப்பாடி 5, குப்பனத்தம் 2.40, காட்டுமன்னார்கோவில் 1, லால்பேட்டை 1;
மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 67 மி.மீ., மழை பதிவாகியது.
