/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி.,யினர் - போலீஸ் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
/
வி.சி.,யினர் - போலீஸ் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
வி.சி.,யினர் - போலீஸ் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
வி.சி.,யினர் - போலீஸ் தள்ளுமுள்ளு விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
ADDED : பிப் 04, 2025 06:29 AM

விருத்தாசலம்: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக ஊர்வலம் செல்ல முயன்ற வி.சி., கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கோரி, கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் வி.சி., சார்பில் நேற்று மாலை ஊர்வலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விருத்தாசலத்தில் உள்ள காங்., மாளிகையில் இருந்து பாலக்கரை ரவுண்டானா வரை ஊர்வலம் செல்லும் வகையில், கடலுார் மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
அவர்களிடம், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அரசு பஸ்களில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் வி.சி., தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற நுாற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, ரயில்வே திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.