/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 07:34 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த இறையூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநில செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க செயலாளர் வரதன், மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன், அரவிந்தன் உட்பட ப லர் பங்கேற்றனர்.
கரும்பு டன் ஒன்றுக்கு 5,500 ரூபாய் விலை அறிவிக்க வேண்டும். வாகன வாடகை பாக்கியை உடனே வழங்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கரும்பு விதை கருணைகளை வழங்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்படும் போது ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் காப்பீடு பெற்று தர வேண்டும்.
கரும்பு நடவு மானியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.
பொருளாளர் கொளஞ் சி நாதன் நன்றி கூறினார்.