/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊக்க தொகை கிடைத்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஊக்க தொகை கிடைத்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ஊக்க தொகை கிடைத்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ஊக்க தொகை கிடைத்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 12, 2025 06:55 AM
நெல்லிக்குப்பம் :  தமிழக அரசு கரும்புக்கு அறிவித்த ஊக்க தொகை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான விலையை அறிவிக்கும். மாநில அரசு சூழ்நிலைக்கேற்ப கூடுதல் விலையை அறிவிக்கும். அதை தனியார் ஆலைகள் வழங்கி வந்தன. ஆனால்,  2013ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு கூடுதல் விலையை அறிவிக்க அதிகாரமில்லை என கூறி மத்திய அரசு அறிவிக்கும் விலையையோ அல்லது கரும்பு பிழிதிறனை கணக்கில் கொண்டு அதற்கு குறைவாகவோ ஆலைகள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு விலையை உறுதி செய்யும் வகையில் சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்க, தமிழக அரசு 245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே இந்த ஊக்க தொகை வழங்கபட்டுவிட்டது.
இந்நிலையில் நேற்று தனியார் ஆலை விவசாயிகளுக்கும் ஊக்க தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

