/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
/
இறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
ADDED : பிப் 05, 2025 06:20 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் எஸ்.என்.ஜெ., அம்பிகா சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவை பணியை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஜெ., குழுமம் தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார். கீதா ஜெயமுருகன், நிர்வாக இயக்குனர் அனிதா ராஜேந்திரன், பொது மேலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். பொது மேலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று, நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவைப் பணியை துவக்கி வைத்து, பேசினார்.
அப்போது, கரும்பு மேலாளர் குமணன், தி.மு.க., பெண்ணாடம் நகர செயலாளர் குமரவேல், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், நல்லூர் ஒன்றிய செயலாளர் சிவதியாகராஜன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செம்பியன், தொழிலதிபர்கள் ஞானகணேசன், சிவசங்கரன், ஐ.என்.டி.யூ.சி., ராமலிங்கம், காங்., நகர தலைவர் கந்தசாமி, விவசாயிகள் உட்பட பலர் பங் கேற்றனர். ரமேஷ் நன்றி கூறினார்.