/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
/
சேத்தியாத்தோப்பு ஆலையில் கரும்பு அரவை துவக்கம்
ADDED : ஜன 06, 2025 10:31 PM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழா நடந்தது.
ஆலை மேலாண் இயக்குனர் ரமேஷ் தலைமை தாங்கினார். தலைமை பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன். பா.ம.க.. மாவட்ட தலைவர் தேவதாஸ்படையாண்டவர், தி.மு.க.. ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, சபாநாயகம், கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் சிட்டிபாபு முன்னிலை வகித்தனர்.
தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன், ராஜதுரை வரவேற்றனர். ஆலை மேலாண் இயக்குனர் ரமேஷ் மற்றும் விழாவில் பங்கேற்ற விவசாயிகள் கரும்பு துண்டுகளை போட்டு அரவையை துவங்கினர்.
கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், தொழிலாளர் நல அலுவலர் சக்கரபாணி, பாலமுருகன், ஜெயமணி, இளவரசன், குஞ்சிபாதம், கானுார் அரிகிருஷ்ணன், முன்னாள் இயக்குனர் பாலமுருகன், பொறியாளர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் ஆலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

