ADDED : டிச 21, 2025 06:00 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்க விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
ஆலை பொது மேலாளர் மணிகண்ட வெங்கடேசன் அரவையை துவக்கி வைத்தார்.கரும்பு துறை தலைவர்கள் கார்த்திக்,தேவராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஆலை பொதுமேலாளர் மணிகண்ட வெங்கடேசன் கூறுகையில், 'நடப்பு பட்டத்தில், 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை, 15 நாட்களுக்குள் ஒரே தவணையில் வழங்குகிறோம். கரும்புக்கு மட்டுமே நிலையான விலை உள்ளது.
விவசாயிகள் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.
குறிப்பிட்ட ரக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறோம்.
விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
