தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கரும்பு கொள்முதல் விவகாரம் : விவசாயிகள் போர்க்கொடி

 கரும்பு கொள்முதல் விவகாரம் : விவசாயிகள் போர்க்கொடி

 கரும்பு கொள்முதல் விவகாரம் : விவசாயிகள் போர்க்கொடி


ADDED : ஜன 07, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ தி காரிகள் துணையுடன் கரும்பு கொள்முதலில் தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்கவும், அதை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அரசாணை பிறப்பித்து, அதற்கான நிதியை அரசு விடுவித்துள்ளது.

முழு கரும்பு ஒன்றுக்கு 38 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பத்திரக்கோட்டை, குமளங்குளம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 750 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று கரும்பின் தரம், உயரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் வீரமணி தலைமையில், நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 10 பேர், கரும்பு ஒன்றுக்கு அரசு அறிவித்த கொள்முதல் விலை 38 ரூபாயை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் 12:30 மணிக்கு நாமம் அணிந்து, கரும்புடன் போராட்டம் நடத்தினர்.

இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நீடித்தது.

இதுகுறித்து வீரமணி கூறியதாவது:

கடலுார் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கரும்பு ஒன்று 38 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அதிகாரிகள் 13, 15, 17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்கின்றனர்.

இதன் காரணமாக 3,80,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு லோடு கரும்பு (ஒரு கட்டு 20 கரும்பு வீதம் 500 கட்டுகள் கொண்ட 10,000 கரும்பு) 1,30,000 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரும்பு வெட்டு கூலி, லாரி வாடகை கட்டணம் என இதர செலவினங்கள் போக, அதிகாரிகள் வழங்கும் இத்தொகை போதுமானதாக இல்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.

அரசு அறிவித்த கொள்முதல் விலையை முறையாக வழங்க வேண்டும். அதிகாரிகள் துணையுடன் கரும்பு கொள்முதலில் தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி அமைச்சர் பெரிய கருப்பனிடம் நாளை (இன்று) மனு அளிக்க உள்ளோம்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us