ADDED : ஏப் 08, 2026 07:04 PM

புவனகிரி: புவனகிரி பேரூராட்சியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குடிநீர் பந்தல் அமைத்து குடிநீர் மற்றும் நீர் மோர் வழங்குவது வழக்கம்.
இந்தாண்டு சட்டசபை தேர்தலை நடப்பதை முன்னிட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நேற்று குடிநீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான பங்களா பஸ் நிறுத்தம், பொதுப்பணித்துறை அலுவலக பஸ் நிறுத்தம் மற்றும் புவனகிரி பஸ் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் வரவேற்றார்.
செயல் அலுவலர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று குடிநீர் பந்தலை திறந்து வைத்ததுடன், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யுங்கள் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
