தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கோடைக்கால வாசிப்பு பயிற்சி:  வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் அறிவிப்பு

கோடைக்கால வாசிப்பு பயிற்சி:  வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் அறிவிப்பு

கோடைக்கால வாசிப்பு பயிற்சி:  வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் அறிவிப்பு


ADDED : ஏப் 27, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: வாசிப்பு மேம்பாட்டு இயக்க சார்பில், வாசிப்பு பயிற்றி அளிக்கப்பட உள்ளது.

வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கை; கோடை விடுமுறையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள் அருகாமையில் உள்ள நுாலகங்களுக்கு சென்று நீதி நுால்கள், பொது அறிவு நுால்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பயனுள்ள நுால்களை வாசித்து குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

வாசித்து முடித்த நுால்களில் இருந்து அறிந்து கொண்ட விபரங்களை தேதி வாரியாக, ஒவ்வொரு நுால் குறித்தும் ஒரு பக்க அளவில் சிறு குறிப்பு எழுதி வர வேண்டும். தினசரி நாளிதழ்கள் வாசித்து அதிலுள்ள பயனுள்ள கருத்துக்களை தொகுத்தும் எழுதலாம்.

குறைந்த பட்சம் 10 நுால்கள் முதல் இயன்ற அளவிற்கு புத்தகங்கள் வாசித்து முடித்த பின்னர் அவை குறித்து தனித்தனியே குறிப்பு எழுதி அவற்றை தொகுத்து, பெயர், பள்ளி /கல்லுாரி பெயர், வீட்டு முகவரி, மொபைல் எண் குறிப்பிட்டு அஞ்சல்துறை மூலம், ஒருங்கிணைப்பாளர், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம், கதவு எண் 50 லால்கான் தெரு, சிதம்பரம் 608 001, கடலூர் மாவட்டம். மொபைல் எண் 9443046295 என்ற முகவரிக்கு வரும் மே 25ம் க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்த பகுதியில் உள்ள மாணவரும் பங்கேற்கலாம். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறந்த தொகுப்புக்கு பரிசுப் புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us