/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைக்கால நீச்சல் பயிற்சி கடலுாரில் ஏப்.,1ல் துவக்கம்
/
கோடைக்கால நீச்சல் பயிற்சி கடலுாரில் ஏப்.,1ல் துவக்கம்
கோடைக்கால நீச்சல் பயிற்சி கடலுாரில் ஏப்.,1ல் துவக்கம்
கோடைக்கால நீச்சல் பயிற்சி கடலுாரில் ஏப்.,1ல் துவக்கம்
ADDED : மார் 27, 2025 04:27 AM
கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் ஏப்., 1ம் தேதி முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலுார் மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி அளிக்க அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை, 5 பேட்ச்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயிற்சி பெறலாம். ஒவ்வொரு பேட்ஜிற்கும் 12நாட்கள் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய். பயிற்சி கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் யூபிஐ மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்த வரும்போது ஆதார்கார்டு கொண்டு வரவேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் தினசரி ஒரு மணி நேரம் ஆகும். திங்கட்கிழமை விடுமுறையாகும்.