தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு


ADDED : மே 21, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 11:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்து வந்த கோடைக்கால பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலுார் மாவட்டத்தின் சார்பில் 21 நாட்களுக்கு இலவச இருப்பிடமில்லா கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 25ம் தேதி துவங்கியது.

அதில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுக்களில் சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தினமும் முட்டை, பால் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் வீராங்கனை சுமித்ரா, சர்வதேச கையுந்துபந்து விளையாட்டு வீரர் மகாராஜா, கடலுார் இறகுபந்து சங்க பொருளாளர் சிவகுருநாதன் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். கடலுார் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். விழாவில் விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்றுநர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தடகள பயிற்றுநர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us