/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : பிப் 21, 2024 10:48 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரிட்ஜ் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் 185 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ், ெஹட் லைட் உட்பட 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஜமாஅத் தலைவர் ஹாஜி முபாரக் அலி தலைமையில் தலைமை மருத்துவர் சாமிநாதன், டாக்டர்கள் குலோத்துங்க சோழன், கோவிந்தமுருகன் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, விருத்தாசலம் டவுன் ஜூம்ஆ பள்ளி வாசலில் நடந்த அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பின் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழு கூட்டத்திற்கு, அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள் தலைமை தாங்கினர். ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி முபாரக் அலி வரவேற்றார். பொதுச்செயலாளர் சேட்டு முகம்மது தீர்மானங்கள் வாசித்தார்.
அதில், இந்தாண்டு ரம்ஜான் சிறப்புத் தொழுகையை ஆலடி ரோடு நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் முகமது அப்துல்லா நன்றி கூறினார்.
பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.