ADDED : நவ 06, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் கோண்டூரில் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார், கோண்டூர் ஊராட்சியில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோண்டூரில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் பிரவீன் அய்யப்பன், 100 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், ஊராட்சி செயலாளர் வேலவன், நிர்வாகிகள் மாயவன், வீரமுத்து, காசிநாதன், முருகேசன், ஜோதி, கோவிந்தராஜ், கார்த்தி, உதயா, பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.