/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
/
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
ADDED : ஜன 29, 2024 06:25 AM

மந்தாரக்குப்பம், : மேட்டுக்குப்பம் திருக்களுப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் தலைமை தாங்கினார். திருக்களுப்பூர் சன்மார்க்க சங்க தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார். அதில் பெண்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறானளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ருக்குமணி நாகராஜன் ஆன்மிக உரையாற்றினார். சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சின்னதுரை, ராஜேந்திரன், சேகர், கபில்ராஜ், ஞானதுரை, ராதாகிருஷ்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேகத்தை பாதுகாக்கும் மூலிகைகள் கலந்த உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.