/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED : நவ 09, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கந்தர் சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28, ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து, சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கும் ஐதீக நிகழ்வும், கிழக்கு கோபுர வாசலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர். சமேத கோலத்தில் சுப்ரமணிய சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.