தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

 மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

 மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்


ADDED : ஏப் 16, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கடலுார் மாவட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) என, 9 தொகுதிகள் உள்ளன.

மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில், 81 பறக்கும் படை குழுவினர், 81 நிலை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் தமிழக பகுதிக்கு கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைப் பகுதியான கடலுார் சாவடி, கொமந்தான்மேடு, வான்பாக்கம், மருதாடு, மேல்பட்டாம்பாக்கம், அழகிய நத்தம், கண்டரக்கோட்டை என, 8 சோதனைச் சாவடிகள் உள்ளன.

இங்கு, உள்ளூர் போலீசாருடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் சந்தேக வாகனங்களை நிறுத்தி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என, கடந்த 10 நாட்களாக கண்காணிப்பு பணியில்ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, தேர்தலுக்கு 6 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us