ADDED : செப் 27, 2026 05:51 PM
விருத்தாசலம்: மங்களூர் அடுத்த கொளவாய், கீழ் ஒரத்துார், அசகளத்துார் ஆகிய கிராமங்களில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், தொகுப்பு கிராம திட்டத்தின் கீழ் வி.ஆர்.ஐ.,10 நிலக்கடலை விதை உற்பத்தி வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வேளாண் விஞ்ஞானி சத்தியநாரயணன், தொழில்நுட்ப அலுவலர் சாமூண்டீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், 10க்கும் மேற்பட்ட விதை உற்பத்தி வயல்களை ஆய்வு செய்து, விதை உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.
மேலும் விதை உற்பத்தி வயல்களில் மேற்கொள்ள வேண்டிய இனத்துாய்மை, தமிழ்நாடு வேளாண் பல்கலை., மூலம் வெளியிடப்பட்ட புதிய ரகங்கள், நிலக்கடலை பயிர்களுக்கு தேவையான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினர்.
இதில், கிராம விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
