/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு
/
வேளாண் திட்ட பணிகள் அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 06, 2024 10:58 PM

சிறுபாக்கம்; சிறுபாக்கம் அருகே கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டக்குழு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மங்களூர் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டத்தில் 2022--23ம் ஆண்டிற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டது. இதனை சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனூர் ஊராட்சியில் திட்ட மதிப்பீட்டு குழு அலுவலர்கள் ஆனந்த்பாபு, கார்த்திக் ஆகியோர் தலைமையிலான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பணிகள், செயல்பாடுகள், பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். மங்களூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன், வேளாண் துணை அலுவலர் ராமசாமி, உதவி அலுவலர் கணேஷ்பாலன், தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜ்குமார் உடனிருந்தனர்.