/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்
/
வாலிபர் இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் சாலை மறியல்
ADDED : டிச 21, 2024 06:44 AM

சேத்தியாத்தோப்பு : விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் வாலிபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அருள்பாண்டியன்,24; இவர், கடந்த 14ம் தேதி இரவு நண்பர்கள் மணிகண்டன், கிருஷ்ணகுமார் ஆகியோருடன் பைக்கில் விருத்தாசலம் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி அருள்பாண்டியன் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அருள்பாண்டியன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது உறுவினர்கள் நேற்று மதியம் 2:30 மணிக்கு சேத்தியாத்தோப்பு ராஜிவ் சிலை முன் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சேதுபதி, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடந்து, மாலை 3:00 மணிக்கு மறியலை கைவிட்ட கலைந்து சென்றனர்.