நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜையும் சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனை நடந்தது.பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேணுகோபால சுவாமியை வழிபட்டனர்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.