ADDED : மார் 04, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
பூஜையை முன்னிட்டு அன்று மாலை விநாயகர், ராஜ ராஜேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இரவு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு,அம்மனை வழிபட்டனர்.
