தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சின்னம் பொருத்தம் பணி: கலெக்டர் ஆய்வு 

 சின்னம் பொருத்தம் பணி: கலெக்டர் ஆய்வு 

 சின்னம் பொருத்தம் பணி: கலெக்டர் ஆய்வு 


ADDED : ஏப் 17, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புவனகிரி சட்டசபை தொகுதியில் 304 ஓட்டுச்சாவடி மையங்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 772 ஆண்கள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 468 பெண்கள் உள்ளிட்ட, மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 259 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வங்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், புவனகிரி தாலுகா அலுவலகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி, தாசில்தார் தமிழ்ச்செல்வன், உதவி தேர்தல் அலுவலர்கள் கோவிந்தன், வேல்மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us