/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
/
டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : ஜன 22, 2026 06:45 AM

மந்தாரக்குப்பம்: டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விருத்தாசலம் ஜெயப்பரியா பள்ளியில் டேக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஜெயப்பிரியா பள்ளி மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் முதல் மூன்று நிலையிலும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஜெயப்பிரியா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர், பள்ளி இயக்கு நர் தினேஷ், முதல்வர் நித்யா, தனித்திறன் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சூர்யாகண்ணன், பயிற்சி ஆசிரியர் புவியரசி, ஹரிஷ், மதி, ஆசிரியர்கள் உட்பட பலர் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

