/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் தாசில்தார் ஆய்வு
/
அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் தாசில்தார் ஆய்வு
அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் தாசில்தார் ஆய்வு
அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் தாசில்தார் ஆய்வு
ADDED : டிச 15, 2024 08:50 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், தாசில்தார் ஆய்வு செய்தார்.
நேற்று தாசில்தார் தனபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்ததால், அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், வெள்ளாற்றில் நேற்று முன்தினம் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், தண்ணீர் அதிகரித்து அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்றது. அப்போது, அன்னங்கோவில் மீன்பிடிஇறங்கு தளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.
இதனால், படகுகள், மீன் வலைகள் தண்ணீரில் அடித்து கடலுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள்இருந்தனர். இதுகுறித்து, படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், கடலுார் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்தனர். அன்னங்கோவில் பகுதியில் சூழ்ந்திருந்த தண்ணீர் நேற்று காலை படிப்படியாக குறைந்தது.
தகவலறிந்த, புவனகிரி தாசில்தார் தனபதி நேற்று அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவருடன், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர் செழியன், வி.ஏ.ஓ., குமார், படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.