ADDED : ஜன 31, 2026 07:02 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப் பட்டது.
கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்புக்கான உறுதிமொழியை பேரூராட்சி ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், 'யார் மீதும் தெரியாமலோ, சமூக வேற்றுமையை அடிப்படையாக வைத்து எந்த வகையிலும் தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன்,' என்பன உள்ளிட்ட வாசகங்களை கூறி, பேரூராட்சி ஊழியர்கள் உறுதியேற்றனர்.
மேலும் தீண்டாமை ஒழிப்புக்காக போராடிய தியாகிகளுக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை எழுத்தர் சுந்தரவல்லி, இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
